தளபதி விஜயின் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக திருப்பூரில் நிட் பிரைன் எனப்படும் கம்பெனி விடுமுறை அளித்துள்ளதாக ஒரு அறிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் நேற்றிலிருந்து பகிரப்பட்டு வருகிறது. இது உண்மைதானா என்று விசாரிக்கையில் அந்த அறிக்கைக்கு கீழுள்ள பின்கோடு நம்பர் உண்மையாக திருப்பூரில் இருப்பதே இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த கம்பெனி மட்டும் திருப்பூரில் உள்ளதாக சொல்லப்படுகிறது இது எப்படி சாத்தியம் என சமூக வலைதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கி நாளை திரையரங்குகளில் கோலாகலமாக வெளிவர காத்திருக்கும் படம் தான் பீஸ்ட் என்னதான் எதிரில் கே.ஜி.எஃப் 2 என்ற ஒரு பிரம்மாண்ட படம் வந்தாலும் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட திரைப்படம் நாளை வெளிவர போவதை அடுத்து பல கம்பெனிகளில் விஜய் ரசிகர்களும் மற்றும் சினிமா ரசிகர்களும் விடுமுறை கேட்டு வருகின்றனர். இருப்பினும் விடுமுறைகளை அந்தந்தக் கம்பெனிகள் தந்தாலும் சில கம்பெனிகள் போலியாக ஒரு அறிக்கையை எடுத்துக் கொண்டு வந்து படத்தை புரமோட் செய்கிறேன் என்ற பெயரில் தவறுதலாக அதை பயன்படுத்தி அறிக்கையை வெளியிடுகின்றனர். அப்படி அறிக்கையை வெளியிட்டு தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் தான் நீட் பிரைன்.
இந்த கம்பெனி நாளை வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்திற்கு நாங்கள் விடுமுறை அளிக்கிறோம், அதுமட்டுமில்லாமல் படத்தை தவறுதலாக டவுன்லோட் செய்து பார்ப்பது போன்ற விஷயங்களை தடுப்பதற்காக நாங்கள் எங்கள் கம்பெனி ஊழியர்களுக்கு ஃப்ரீயாக டிக்கெட்டுகளையும் போட்டு தருகிறோம் என்று அந்த அறிக்கையில் கையெழுத்திட பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் கீழே திருப்பூர் என்று கூறப்பட்டு ஒரு பின்கோடு நம்பர் இணைத்துள்ளனர், உண்மையிலேயே அந்த பின்கோடு திருப்பூரை சேர்ந்தது கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

அப்படியெனில் இந்த கம்பெனி எங்கிருந்து முளைத்தது என்று யாருக்கும் தெரியவில்லை தற்போது இந்த அறிக்கை இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பு தளபதி விஜய் அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஐரா என்கிற ஒரு விருது அளிக்கப்பட்டது. அந்த விருது வந்து சில மாதங்கள் கழித்து தான் தெரிந்தது அது ஒரு டுபாக்கூர் கம்பெனி என்றும் அந்த கம்பெனிக்கு ஒட்டுமொத்தமாக 10 பாலோவர்ஸ் கூட இணையதளத்தில் இல்லை என்பது. தளபதி விஜய்க்கு மட்டும் இந்த மாதிரி நிறுவனங்கள் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியவில்லை என இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
