திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செல்பி மோகத்தால் இளைஞர் ஒருவர் பாறையில் இருந்து வழுக்கி விழுந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொடைக்கானலில் தற்போது இரவும் பகலமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக எல்லா நீர்நிலைகளிலும் அருவிகளிலும் நீர் பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. அஜய் பாண்டியன் என்கிற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காந்தி குடி மங்கலம் கொம்பு மலை கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
உபி-யில் கிராமவாசிகளை மயக்கி கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சி | போலீசார் அதிரடி நடவடிக்கை


அஜய் பாண்டியன் கீழ்மலை கிராம அருவியில் போட்டோ எடுக்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அருவியில் உள்ள ஒரு பாறை சரிவில் நின்று ஆபத்தான முறையில் போட்டோ எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கால் தவறி திடீரென்று கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து இவரது நண்பர்கள் கேமராவில் பதிவு செய்த இறுதி நிமிட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் மேலும் மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினர் காவல் துறையினரோடு இணைந்து தேடி வருகின்றனர்.

இரவு நேரம் ஆனதாலும் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மாயமான இளைஞரை தேடும் பணி தற்போது கடினமாக மாறிவருகிறது.
கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம்
— DON Updates (@DonUpdates_in) August 4, 2022
⚠️ பதைபதைக்கும் காட்சிகள் pic.twitter.com/7lELUMYPUE