காலில்லாத ஊனமுற்றோர் ஒருவருக்கு விராட் கோலி அவரது டீ-சர்ட்டை அந்த ஊனமுற்றோர்ருக்கு பரிசாக அளித்து நெகிழ வைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விராட் கோலி அவரது 100வது டெஸ்ட் நேற்று மொகாலியில் ஆடினார். ஸ்ரீலங்கா உடனான இந்த தொடரில் இந்திய அணி எளிதில் வெற்றி கண்டது. இந்த இன்னிங்ஸ் வெற்றியின் மூலம் ரோகித்சர்மாவுக்கு இது கேப்டனாக முதலாவது டெஸ்ட் வெற்றி என்று சொல்லலாம். ஆனால் 100வது டெஸ்டில் களமிறங்கும் விராட் கோலிக்கு இன்னும் அந்த சதம் வரவில்லையே என்று ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர். அப்படி சோகத்தில் இருக்கும் தருவாயில் இந்த வீடியோ அவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
அந்த வீடியோவில் ஊனமுற்ற ஒருவர் கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பஸ்ஸின் முன் விராட் கோலியை சந்திக்க செல்கிறார். அப்போது அதைக் கண்ட விராட் கோலி அவரை மகிழ்விக்கும் வகையில் அவரது டி-ஷர்ட் ஒன்றை பரிசாக அளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த டிஷர்ட்டைப் பெற்றுக்கொண்ட அந்த நபர் ட்விட்டர் பக்கத்தில் “விராட் கோழி தனது 100வது டெஸ்ட் போட்டியின்போது எனக்கு டீ-சர்ட்டை அளித்துள்ளார் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள் இதுதான்” என்று பதிவிட்டு இருக்கிறார்.