இந்தியாவுக்கும் ஸ்ரீ லங்காவுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கு இருக்கிறது இதில் விராட் கோலி டெஸ்டில் தனது 100-வது ஆட்டத்தை இன்று ஆட உள்ளார். அதற்காக விராட் கோலியை கௌரவிக்கும் வகையில் ஒரு தொப்பியை அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலிக்கு கொடுத்தார்.
அப்போது அங்கு பேசிய விராட் கோலி “100வது டெஸ்ட் போட்டி விளையாடும் போது என்னுடைய அண்ணன் மற்றும் என்னுடைய மனைவி என்னுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்னுடைய சிறுவயதில் நான் ஹீரோவாக பார்த்த ராகுல் டிராவிட்திடம் இந்தத் தொப்பியை பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்
விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரின் இந்த படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
மேலும் தனது 100 ஆவது டெஸ்டில் 71ஆவது சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விராட் 45 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார்.