குக்கு வித் கோமாளி பார்த்து ரசிகர் ஒருவர் மன அழுத்தம் நீங்கியதும் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ள தாகவும் கூறியிருக்கிறார். இதை போட்டியாளர் குரேஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. ஏனென்றால் அந்த நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண் கர்ப்பமானார் என்று சொல்ல அது மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது. அவர் கூறிய அந்த வார்த்தையை மீம் பக்கங்களில் பலர் ட்ரோல் செய்தனர். அந்த அளவிற்கு ஒரு சர்ச்சையை கிளப்பிய நிகழ்ச்சியாக இந்த குக்கு வித் கோமாளி இருந்து வருகிறது.

தற்போது குரேஷி அவர்களும் இது தொடர்பாக ஒரு ஸ்கிரீன் ஷாட் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ரசிகை ஒருவர் அனுப்பிய பதிவு என்னவென்றால் “எனது பதிவிற்கு அண்ணா நீங்கள் ரிப்ளை பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் மெசேஜ் அனுப்புவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீவிரமாக கடந்து சில நாட்களாக நான் என் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர குக் வித் கோமாளி உதவியாக இருந்தது.
கோமாளிமாக நீங்கள் சுருதி போல நடித்த பகுதி என் மனதை அமைதி படுத்தியது. நான் அதை மீண்டும் மீண்டும் பார்த்தேன் கண்டிப்பாக ஒரு 100 முறைக்கு மேல் ஆவது நான் அதை பார்த்து இருப்பேன். எனக்கு சலிப்பு தட்டவில்லை மிக்க நன்றி அண்ணா நான் உங்களின் பெரிய ரசிகன் அண்ணா. விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ள ார் குரேஷி அவர்கள் இத பதிவிட்டுள்ளார்.
