புது பட ரிவியூ | அதர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் குருதியாட்டம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் போன்றோர்கள் நடிச்சு இன்னைக்கு திரையரங்கில் வெளியாகி இருக்கிற படம் தான் குருதியாட்டம்.

படத்துடைய கதை உடம்புக்கு முடியாமல் இருக்கிற ஒரு குழந்தை அந்த குழந்தையை காப்பாற்ற ஹீரோ எடுக்கும் முடிவு அதற்கு நடுவுல வருகிற சில கிளை கதைகள் இது தான் கதை. 8 தோட்டாக்கள் இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் எடுக்கும் இரண்டாவது படம் என்பதால் இந்த படத்திற்கு சாதாரணமாகவே ஒரு எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யதா என்பதை கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் பதில் வரும்.

ஏனென்றால் படத்தில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் சுத்தமாக இயக்குனருக்கு தெளிவில்லை. கதை பல கோணங்களில் நகர்கிறது. எந்த கதையை நாம் தேடிப் பிடித்து பயணிக்க வேண்டும் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. படத்தில் ராதாரவியின் மகனாக வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு நடிப்பு என்பதே வரவில்லை. இத்தனைக்கும் அந்த கதாபாத்திரத்தில் எந்தவித வலுவும் இல்லை. அந்த கதாபாத்திரத்தை போலவே மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் வலு இல்லாமல் போனது மிகப்பெரிய நெகடிவ்.

ஒரு காட்சி நடைபெறுகிற போது இன்னொரு காட்சிக்கு கதை தாவுகிறது ஆனால் இந்த படம் ஒரு நான் லீனியர் கதை அல்ல. ஆனாலும் ஒரு சில கட்டிங் மிஸ்டேக் படத்தில் ஆங்காங்கே இருக்கிறது. ராதிகா கடைசி வரை இருந்த இடத்திலிருந்து நீ அப்படி பண்ணு… நீ அப்படி போ என்று சொல்கிற நார்மல் டெம்ப்லேட் வில்லியாக தான் வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கும் எந்தவிதமான வெயிடும் இல்லை. படத்தின் இசை ஒரு சில இடங்களில் சூப்பராக இருந்தாலும் பல இடங்களில் தேவையே இல்லாமல் இந்த பிஜிஎம் எதற்காக இந்த காட்சிக்கு ஓடுகிறது என்று தான் தோன்ற வைக்கிறது.

ராதிகா, ராதாரவி, அதர்வா, பிரியா பவானி சங்கர் என இத்தனை நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் வீணடித்திருக்கிறார் என்பது தான் நிதர்சனம். ஒட்டுமொத்தமாக மிகவும் சுமாரான கதையும் மற்றும் திரைக்கதை எந்த இடத்திலும் ரசிகனை எந்த விதத்திலும் இந்த படம் திருப்தி படுத்தவில்லை எட்டு தோட்டாக்களை நம்பி போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Kingwoods rating :- 1.5/5

Spread the love

Related Posts

நடிகரும், இயக்குனரும் மற்றும் ராதிகாவின் முன்னாள் கணவருமான பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும் மற்றும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வயது மூப்பு காரணமாக இன்று அவரது வீட்டில்

ஆடையால தான் தப்பு நடக்குதா ? | மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ எடுத்து நூதன முறையில் போராடும் கேரள பெண்கள் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

பெண்களின் ஆடைகளை தொடர்பு படுத்தி தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றது என சர்ச்சையான தீர்ப்புகள் வருவதால்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து 32 ஆண்டுகால சாபத்தை உடைத்தெறிந்தது சரித்திர வெற்றியை பெற்றுள்ளது பாஜக

உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி கடந்த 32 ஆண்டுகளில் ஆட்சியை தக்கவைத்ததாக சரித்திரமே