நடிகை குஷ்பு அவர்கள் தனக்கு எதற்காக குஷ்பூ என்று பெயர் வந்தது என ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளது என்னவென்றால் எனக்கு மூன்று அண்ணன்கள் வீட்டில் நான் தான் கடைக்குட்டி மும்பையில நாங்க இருந்த இடம் வந்து ஒரு குட்டி இந்தியா மாதிரி, அங்கு இரண்டு முஸ்லிம் குடும்பங்கள நாங்க ஒண்ணா இருந்தோம். மத்தபடி அங்கிருந்தவர்கள் அனைவருமே பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். தீபாவளி கிருஷ்ண ஜெயந்தி களுக்கு நடுவே தான் நாங்கள் வளர்ந்தோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வளங்களில் அவர்கள் கொடுக்கும் கொழுக்கட்டைக்காகவே ஜெய ஜெய என கோஷம் போடுவோம்.
நீதிமன்றத்திற்கு அல்வா கொடுத்து விட்டு தலைமறைவான மீரா மிதுன் | போலீசார் வலைவீச்சு

நான் சென்னை வந்த பிறகு எனக்கு மூன்று அண்ணனும் கூடவே வந்து விட்டார்கள். அண்ணனுக்கு நடிகை ஹேமமாலினி அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி நாங்கள் செல்வோம் அங்கு தான் அவர் வீட்டில் நாங்கள் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவோம். ஒரு முறை அப்படி சென்றபோதுதான் தயாரிப்பாளர் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை டி ஆர் சோப்ரா வந்திருந்தார்கள்.
என்னை பார்த்ததுமே இந்த பெண் நடிப்பாளா என கேட்டார்கள் நான் நடிச்சா என்ன தருவீங்க என கேட்டேன், உனக்கு என்ன வேணுமோ தருகிறேன் என அவர்கள் கூறினார்கள். அப்போது எனக்கு ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் என பதில் அளித்தேன். இது நடந்த போது எனக்கு எட்டு வயது. அவர்கள் தான் என்னுடைய பெயரை குஷ்பு என மாற்றினார்கள். என்னுடைய வீட்டில் என்னை நிக்கத் என்ற பெயரில் தான் அழைப்பார்கள் என்னுடைய பெயர் நிக்கத் என்பது பெர்சிய மொழியை சார்ந்தது. அதனால் அதற்கு ஈடான இந்தி பெயர் குஷ்பூ என எனக்கு சூட்டினார்கள் என அவர் ஜாலியாக பதில் அளித்தார்.
