“திமுக எம்.பி-யிடமும், முதலமைச்சர் ஸ்டாலினிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” – குஷ்பூ

தவறான செய்தியை பதிவிட்டதால் திமுக எம்பி இடமும் முதலமைச்சர் ஸ்டாலின் இடமும் மன்னிப்பு கேட்டு குஷ்பூ அவர்கள் வெளியிட்டிருக்கும் ட்வீட் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் ஒரு புதிய நூலகம் அமைக்க உள்ளனர். இதற்காக அங்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திமுக எம்பி செந்தில்குமார் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த கற்களை காலால் எட்டி உதைத்ததாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளே தங்கள் சொந்த கட்சி எம்பி க்கு கண்டனம் தெரிவித்து அவரது செயலுக்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர்.

“அஜித் ஒரு பப்ளிசிட்டி பிரியர், ஈகோ பார்ப்பவர், வடிவேலுவுடன் இணைந்து நடிக்காததற்கும் காரணம் இது தான்” – காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஓபன் டாக்

தற்போது பூஜை பொருட்களை நான் காலால் எட்டி உதைக்கவில்லை என தன் பக்க வாதத்தினை எம்பி செந்தில் குமார் முன்வைத்தார். அவர் கூறியது என்னவென்றால் பூமி பூஜையில் மதம் தொடர்பான நிகழ்வுகள் இருக்கக் கூடாது என நான் முன்னரே கூறியிருந்தேன். அதற்கு அவர்கள் சம்மதித்த பின்பு தான் நான் அந்த பூஜைக்கு சென்றேன். அந்த பூஜையில் வைக்கப்பட்டிருந்த கல்லில் மஞ்சள் குங்குமம் பூசியதை எடுத்து வைத்துவிட்டு பணிகளை தொடங்கி வைத்தேன்.

பின்பு அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மதம் சார்ந்த வழிபாடுகள் என்றால் என்னை அழைக்க வேண்டாம் என கூறிவிட்டு வந்தேன். நான் அந்த செங்கலை உதைத்ததாக கூறுவது ஒரு பொய்யான தகவல். இதனை அடுத்து பாஜகவை சேர்ந்த குஷ்பூவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். தற்போது அதனை டெலிட் செய்து விட்டு எம்பி செந்தில்குமாருக்கும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என கூறிவிட்டு அந்த பதிவை நீக்கி இருக்கிறார். தற்போது எது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

Spread the love

Related Posts

Funny Video | மாஸ்க் அணிவது எப்படி என்று தெரியாமல் அவஸ்த்தை படும் பாஜக தொண்டரின் காமெடி வீடியோ இணையத்தில் படு வைரல்

பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு மாஸ்க் அணிவது எப்படி என்று தெரியாமல் தவித்த வீடியோ காட்சி

ரஜினி படத்தில் தமன்னாவுக்கு இப்படி ஒரு கதாபத்திரமா ? | படத்தில் ஏகப்பட்ட ஹீரோயின்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு எப்படிப்பட்ட ஒரு ரோல் என்று தற்போது

Viral Video | ராஜபக்சேவின் மருமகள் உட்பட அவரின் குடும்பத்தார் தனி விமானம் மூலம் எஸ்கேப் ஆகி செல்லும் வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது

இலங்கையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள பொருளாதார பிரச்சனையின் காரணமாகவும், மக்களின் எதிர்ப்பின்