தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். அந்த நேரத்தில் அஜித்தின் வேதாளம் படத்திலும் நடித்த பெரிய நடிகை அந்தஸ்தைப் பெற்றார். அவர் தற்போது ஒரு நேர்காணலில் பேசியபோது தேடிப்போய் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லை என சட்டென்று பதில் அளித்தார்.
மேலும் பேசிய லட்சுமி மேனன் “அஜித் ரொம்ப ஓபனா, அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையெல்லாம் சொன்னார். அது எல்லாத்தையும் சொல்ல முடியாது, ஆனால் எதையும் மறைச்சு வைக்காத ஒரு நபர் அவர். ஒரு நாள் இட்லி, சாம்பார், சட்னி என எல்லாமே மரண டேஸ்ட் ஆஹ் எனக்கு செஞ்சி கொடுத்தார். மீன் பிடிக்கும் என்று சொன்னதின் காரணத்தினால் அவர் எனக்கு ரொம்ப டேஸ்டான ஒரு மீன் செஞ்சி கொடுத்தாரு.”
அதனுடன் வேதாளம் திரைப்படம் சூட்டிங்கிற்கு பிறகு அவரை நீங்கள் சிந்தித்தீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் அவரை நான் பார்க்கவே இல்லை கடைசியா போகும்போது ஸ்பெஷலா எதுவும் சொல்லவே இல்ல பாய் டேக் கேர் அவ்ளோ தான் சொன்னாரு ஷூட்டிங் நடந்தபோது பேசிக் கொண்டது தான் அதிகம்” என்றார்.

மேலும் அவரிடம் அஜித் படத்தில் நடித்து விட்டீர்கள் அடுத்து விஜய் படத்தை எப்போது நடிக்கப் போகிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், “என்னிடம் இந்த கேள்வியை நிறைய பேர் கெட்டு விட்டனர், அஜித்துடன் எனக்கு வாய்ப்பு வந்தது நான் நடித்தேன். அதேபோல் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை, ஆசைப்படலாம், ஆனால் தேடிப் போற வேலை இல்லை வந்தா பண்ணலாம் அவ்வளவுதான் என்று கூலாக பதில் கூறினார்.
