லெஜென்ட் சரவணன் இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என அந்த படத்தின் நாயகி சொன்ன வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லெஜன்ட் படம் வெளியாகும் போது பல மாநிலங்களுக்கு சென்று அந்தப் பட குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாலிவுட்டுக்கு சென்று பேட்டி அளித்த நமது லெஜென்ட் சரவணாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் :- “நீங்கள் நடனமாடுகிறீர்கள், சண்டை போடுகிறீர்கள், அழுகிறீர்கள், நடிக்கிறீர்கள் இப்படி எல்லாமே செய்கிறீர்களே இது எப்படி என கேட்கப்பட்ட கேள்விக்கு லெஜெண்ட் சரவணன் அவர்கள் எல்லாத்தையும் படிப்படியாகத்தான் கத்துக்கிட்டு வர்றேன்.

எப்பவுமே நம்ம எல்லாத்தையும் கத்துகிட்டு வருவதில்லை, போக போக தான் பழகிப்போம் என்று பதிலளித்தார். அப்போது அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த லெஜன்ட் பட நடிகை ஊர்வசி ரௌட்டால லெஜெண்ட் சரவணனை பார்த்து இன்னும் இவர் பத்து வருடத்தில் தமிழகத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிடுவார் என கிண்டலாக கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையதளம் எங்கும் தீயாய் பரவி வருகிறது. மேலும் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் தான் இவர் படம் நடித்தாரா ? என்றும் பலர் அண்ணச்சியை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சிதான் – மும்பை ப்ரெஸ் மீட்டில் லெஜண்ட் நாயகி உறுதியாக சொன்ன தகவல்.
— ARUNPANDI (@ARUNPAN22655974) July 27, 2022
உதயநிதிக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறாரா அண்ணாச்சி? #TheLegendSaravanan #TheLegendMovie #LegendSaravanan #legendsaravananontwitter pic.twitter.com/NRCpcPmKjR
