நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சமீபத்தில் நடந்த AR ரஹ்மானின் இசைக் கச்சேரியில் நடந்த மிகப்பெரிய குளறுபடி தான் என சொல்லப்படுகிறது. ரகுமானின் இசைக்கச்சேரி சரியாக ஒருங்கிணைக்கப் படாததால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளனர் AR ரகுமான்.

அதே நிலை விஜயின் லியோ படத்திற்கு ஏற்படுமானால் மிகப்பெரிய விளைவை விஜய் சந்திக்க நேரிடும் என்பதாலும் அது விஜயின் அரசியல் வருகையை பாதிக்கும் என்பதாலும் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் எனவும் தயாரிப்பாளர் தரப்பு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது ..

ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் -ல் பேசிய நடிகர் ரஜினிகாந்த் விஜயை மறைமுகமாக தாக்கி பேசியதற்கு லியோ ஆடியோ லான்ச்-ல் விஜய் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .
