சைக்கிளில் சென்ற ஒருவரை சிறுத்தை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
வனத்துறை காவலர் பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது டுவிட்டரில் பெரிதாகப் பேசப்படுகிறது. அவர் பதிவிட்ட அந்த வீடியோவில் ஒரு நபர் சைக்கிளில் வழக்கமாக சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அவரை நோக்கி ஒரு சிறுத்தை பாய்ந்தது. அதனால் நிலைகுலைந்து போன அந்த சைக்கிள் ஓட்டி உடனே தடுமாறி கீழே விழுந்தார்.

பின்பு அந்த சிறுத்தையிடம் போராடி தப்பித்து அதன் தாக்குதலில் இருந்து வெளி வந்தார். அந்த வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி யில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.
“இந்த பாடத்தை டான் சொல்கிறது …..” டான் படத்தை பார்த்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது என்ன ?

ஏனென்றால் ஒரு சிறுத்தை ஒரு மனிதனை தாக்கும் போது கண்டிப்பாக அந்த மனிதன் உயிருடன் தப்பிப்பது என்பது முடியாத ஒரு காரியம். ஆனால் இந்த மனிதர் லாவகமாக அந்த இடத்திலிருந்து தப்பித்து பின்பு சைக்கிளில் ஏறி ரோட்டை கிராஸ் செய்து வந்த வழியே எந்த பெருங்காயமும் இல்லாமல் சென்று விட்டார்.
That cyclist not able to believe on his luck !! @Independent pic.twitter.com/WVbDCMEpX6
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 15, 2022