மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்தவர சகிதா பேகம் மற்றும் அவரது சகோதரி சகோதரி உறவு முறையான வகிதாபானு. இவர்கள் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் அந்த துணிக்கடைக்கு பக்கத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவரிடம் ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சகிதா பேகம் மற்றும் சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போலீசார் போக்சோ மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை நிர்வாணப்படுத்தியுளதாகவும் புகைப்பட ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சில புகைப்படங்களையும் அவரைத் திருமணம் செய்ததாக ஒரு சில புகைப்படமும் அவர்களுடைய செல்போனில் இருந்து போலீசார் கண்டுபிடித்தனர். இதனடிப்படையில் அந்த இரண்டு சகோதரிகளையும் காவல்துறை கைது செய்ததுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
