வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் நாடு இந்துக்கள் இல்லாதவர்களாக மாறிவிடும் அதனால் சீக்கிரமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என சர்ச்சையை கிளப்பியுள்ளார் இந்துத்துவ வாதியான யதி நரசிங்கானந்த்.
ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை பேசியதால் ஜெயிலுக்கு சென்ற இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளி வந்த கையோடு இவர் நாடு இந்துக்கள் இல்லாதவர்களாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சர்ச்சையான பேச்சை பேசியுள்ளார்.

காசியாபாத்தில் உள்ள தர்ஷனா கோவிலின் தலைமை பூசாரி யான இவர் கடந்த டிசம்பர் மாதம் ஹரித்வாரில் இந்துக்கள் மாநாடு ஒன்றை நடத்தினார், அதில் இஸ்லாமியர்கள் இனப் படுகொலை செய்யப்பட வேண்டுமென்று சர்ச்சைக்குள்ளான பேச்சை பேசி இதனால் இவர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளிவந்த நிலையில் மேலும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
இந்து மகாபஞ்சாயத் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “2029 இல் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக போகிறார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் இதை தடுத்து நிறுத்திட இந்துக்கள் முடிந்த அளவு அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் ஒரு முஸ்லிம் நபரை முதல்வராக ஆக்கினால் அவர் இந்த நாட்டில் 50 சதவீத இந்துக்களை முஸ்லிமாக மாற்றிவிடுவார். அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது எனவே இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என அவர் பேசியுள்ளார்.
