பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான லிங்குசாமி பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் ஒன்று சேர்ந்து பணியாற்றியவர். சூர்யா, கார்த்தி, மாதவன், விஷால் போன்று பல நட்சத்திரங்களை வைத்து ஹிட் படம் கொடுத்தவர் லிங்கசாமி.

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் கே எஸ் ரவிக்குமாருக்கு அடுத்து இவர் பெயர் தான் எல்லோருக்கும் எளிதில் நினைவு வரும். அந்த அளவு கமர்சியல் படம் என்றால் லிங்குசாமி என்று சொல்லும் அளவிற்கு பேமஸ் ஆக இருந்த இயக்குனர் தான் இவர். இவர் இயக்கத்தில் வந்த பையா, சண்டக்கோழி, ரன், போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலிலும் சாதனை படைத்த படங்கள்.

கணவனை கழட்டி விட்டு தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நயன்தாரா

இப்படிப்பட்ட இந்த இயக்குனருக்கு தற்போது நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை எனக்கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

அந்த பிவிபி நிறுவனத்திடம் 1.03 கோடி தொகையை கடனாக பெற்று திருப்பி தராததால் இந்த வழக்கு அவர்களால் தொடரப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஆறு மாதங்கல் சிறை என்ற செய்தியை அறிந்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Spread the love

Related Posts

கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி முன்னழகை காட்டி போட்டோ போட்ட 20 வயது நடிகை ஷிவானி

நடிகை சிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு முன் அழகை முழுவதும் ரசிகர்கள் முன்னலையில்

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலர் | போலீசார் அதிரடி கைது

நடிகை அமலா பால் தென்னிந்திய திரை உலகில் ஒரு உச்ச நட்சத்திரம் ஆவார். இவர் தமிழில்

மறுபடியும் மொதல்ல இருந்தா ?? | மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல் | சோகத்தில் வாடிக்கையாளர்கள்

தற்போது தொலைத்தொடர்பு சேவை சந்தையில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ஏர்டெல் தான் எப்போது ஜியோ நிறுவனம்

x