உதட்டில் முத்தமிடுவது, அந்தரங்க பாகங்களை தொடுவது போன்ற செயல்கள் பாலியல் குற்றமாகாது | சர்ச்சையில் முடிந்த நீதிபதி கருத்து

உதட்டில் முத்தமிடுவது உடலை சீண்டுவது போன்ற செயல்கள் பாலியல் குற்றமாகாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

நம் இந்திய சட்டத்திலேயே மனைவியின் அனுமதி இல்லாமல் கணவன் உடலுறவுக்கு தூண்டினாலும் வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டால் அது குற்றம் என சட்டம் கூறுகிறது. ஆனால் அப்போது ஒரு சில நீதிபதிகள் அதை மறுத்து கூறி சில வார்த்தைகளை வெளியே விடுகின்றனர். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் தான் நிகழ்ந்திருக்கிறது. உதட்டில் முத்தமிடுவது உடலை தீண்டுவது இயற்கை, அது குற்றம் அல்ல என்ற கருத்தை சொல்லி நீதிபதி ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்துள்ளது. அங்கே ஒருவரின் வீட்டு பீரோவில் இருந்த பணம் மாயமாகி உள்ளது. அந்த தந்தை மகனிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார் அதற்கு மகன் நான்தான் அந்த பணத்தையும் எடுத்து செலவு செய்தேன் என் போன் ரீசார்ஜ் செய்வதற்காக அந்த பணத்தை எடுத்தேன் என கூறியுள்ளார். மேலும் கூறிய அந்த சிறுவன் நான் ரீசார்ஜ் செய்ய போகும்போது ரீசார்ஜ் கடை உரிமையாளரை என் உதட்டில் முத்தமிட்டார் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் தொட்டார் என கொற்றியுள்ளான் அந்த சிறுவன். இதைக் கேட்ட தந்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். இதனால் இதை காவல் நிலையத்திற்கு தெரிய செய்தார்.

மேலும் விசாரணையை தொடங்கிய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்போன் கடை உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கேட்டு செல்போன் கடையின் உரிமையாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுஜா, ஒருவரின் உதட்டில் முத்தமிடுவது உடலை வருடுவது போன்றவை இயற்கை க்கு புறம்பான குற்றமல்ல. மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு எந்த விதமான பாலியல் ரீதியான தொந்தரவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் 30 ஆயிரம் செலுத்திச் சொந்த ஜாமீனில் வெளி வரலாம் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதியின் இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related Posts

கல்யாணம் முடித்த கையோட வேலையை துவங்கிய நயன்தாரா | அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன்

கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் பல விருதுகளை தட்டி தூக்கிய தமிழ் பிரபலங்கள் | லிஸ்ட் இதோ

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் தமிழ் பிரபலங்கள் பல விருதுகளை தட்டி சென்றுள்ளனர். அது என்னென்ன என்பதை

நேற்று டீ விற்றவர் நாளை நாட்டையும் விற்பார் | பிரதமரை மறைமுகமாக ட்விட்டரில் விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா அளவிலும் ஒரு பிரபலமான நடிகர் ஆவார்.