சிகிச்சை பலனின்றி நடிகர் ராமராஜ் காலமானார்

அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் அவர் திரைத்துறைக்கு வந்து பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் அவர் பேசிய கும்பிடுறேன் சாமி வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

72 வயதான ராமராஜ் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். முதுகளத்தூரில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் காலமானார்

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox