“குறிப்பாக எனக்கு அஜித்துடன் படம் பண்ண ஆசை… நடந்தா சந்தோஷமா இருக்கும்” – லோகேஷ் கனகராஜ்

எனக்கு நடிகர் அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என ஆசையாக உள்ளது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 45 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் நிறைவு செய்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜாவுடன் மேடையில் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

விக்ரம் படம் வெளிவந்த போது கூட பாரதிராஜா என்னை கூப்பிட்டு பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை ஒரு விஷயத்தை மட்டும் மக்களுக்கு ஒழுங்காக கொண்டு சென்றது. பத்திரிக்கையாளர்களுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். பாரதிராஜா படத்திலிருந்து அதிகம் பார்த்த படம் டிக் டிக் மற்றும் சிவப்பு ரோஜா தான் அந்த காலத்திலேயே மக்கள் இந்த மாதிரி படத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று எனக்கு இன்றளவும் பிரமிப்பாக உள்ளது. இதைப் பற்றி நான் கமலஹாசன் சாரிடம் கேட்டேன் அதற்கு பாரதிராஜா தான் காரணம் என்றும் எனக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததால் கதையைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை என்றும் கமல் சார் என்னிடம் தெரிவித்தார் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் இத்தனை தங்கப்பதக்கங்களை வென்றாரா ? எம்மோவ்…

இந்த விழாவுக்கு பின்ன செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நான் சினிமாவுலகில் மிகவும் ஒரு ஜூனியர் என்னை இதுவரை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு முக்கிய துணையாக இருந்தது பத்திரிக்கை நண்பர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இல்லை. என்னுடைய அடுத்த கதையை நான் எழுத ஆரம்பித்து விட்டேன். அதைப்பற்றி புரொடக்ஷன் சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் அதனால் காத்திருங்கள் என்றார்.

ரஜினி மற்றும் கமலை வைத்து ராஜ்கமல் ப்ரோடக்க்ஷனில் ஒரு படம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானதே அது உண்மையா என கேட்டதற்கு அது மிகவும் ஒரு கடினமான காரியம் ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும் என கூறி இருந்தார். மேலும் அனைத்து நடிகர்களுடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. குறிப்பாக அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது என இது ஒரு பெரிய செயல் நேரம் வரும்போது நடைபெறும் என்று நம்புகிறேன் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related Posts

நடிகை ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளில் நடிக்க இந்த இயக்குனர் தான் காரணமா, லீக்கான ஆண்ட்ரியா வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் ஆண்ட்ரியா அங்கிளோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலி பணியிடங்களுக்கான தேர்வின் அறிவிப்பு தேதி தமிழ்நாடு அரசு

நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் தீய செயல்கள்

நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் சில ஆரோக்கியத்தை கெடுக்கும் செயலை பற்றி தான்