தர்மபுரி மாவட்டத்தில் கணவனின் நண்பனுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் திருமணம் ஆனது. அவர்களுக்கு தற்போது 11 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். மேலும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரும் அவர்களுடன் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சின்ன பையனும், சதீஷும் பக்கத்து பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள். இருவரும் நட்புடன் பழகி வந்தனர் சதீஷ் அவரை வீட்டிற்கு அழைத்து உபசரிப்பும் செய்திருக்கிறார். அப்போது நாளடைவில் சின்ன பையனுக்கும் சதீஷின் மனைவிக்கும் கள்ள காதல் உறவு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்தஉண்மை சதிஷிர்க்கு தெரிய வர இருவரையும் எச்சரித்து அனுப்பினார்.
இதை கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாத மனைவி மேலும் கள்ள காதலனுடன் தகாத உறவை தொடர்ந்தார். இந்த நிலையில் மே 3ஆம் தேதி சின்னப்பையனோட மனைவி சங்கீதா தலைமறைவானார். தனது 11 மாத குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. நண்பனுடன் மனைவி மாயமான நிலையில் இதைப் பற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் சதீஷ். அதன் பெயரில் பென்னகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சின்ன பையன் மற்றும் சங்கீதாவின் செல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு வலியுறுத்தினர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் விசாரணைக்கு சென்றபோது அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். இதனை பார்த்த பெண் காவலர்கள் அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவர்கள் விஷம் குடித்து விட்டதாகவும் அதனால் அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பென்னகரம் காவல்துறையினர்.
