கர்நாடகா மாநிலத்தில் ஒரு இளம் காதல் ஜோடி பைக்கில் அமர்ந்து லிப் லாக் கிஸ் அடித்தபடி சென்ற ஒரு வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை செல்லும் சாலையில் காதலன் வண்டி ஓட்ட பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து காதலி அந்த காதலனுக்கு லிப் லாக் கிஸ் அடிக்கிறார். முதலில் சீட்டுக்கு பின்புறம் அமர்ந்திருந்த காதலி, பின்பு முன்னால் இருக்கும் பெட்ரோல் டேங்கில் அமர்ந்துள்ளார். அமர்ந்தது மட்டுமல்லாமல் முன்னால் வரும் வண்டியை மறைக்கும் விதமாக கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் அடித்துள்ளார்.

மிகவும் அபாயகரமான இந்த செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். முன்னால் பஸ்கள் லாரிகள் என்று எது வந்தாலும் அவர்களுக்கு அது தெரியாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் பெரிய விபத்தும் நிகழும் என்று சமூக வலைதள வாசிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சல்லாபத்தில் ஈடுபட வேண்டுமென்றால் நீங்கள் வீட்டில் நான்கு சுவற்றுக்குள் செய்து கொள்ளுங்கள் அதை தவிர்த்துவிட்டு வெளியில் இப்படி செய்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றும் கூறிவருகின்றனர் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவுகிறது.