எல்பிஜி சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே வருகிறது அதனடிப்படையில் போன மாதம் ஒரு விலை இருந்தது. அந்த விலை மார்ச் மாதம் அப்படியேதான் இருக்கிறது. எந்த வித மாற்றமும் வீட்டு சமையல் எரிவாயுவுக்கு செய்யவில்லை.
ஆனால் தொழில்முறைகாக பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் ரூபாய் 105 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 19 கிலோ சிலிண்டரின் விலை 2012 ரூபாயாக உள்ளது. கடந்த மாதம் அதே எரிவாயுவின் விலை 91.50 ரூபாய் வரை குறிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
அதேபோல 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலையும் ரூபாய் 27 காசுகள் அதிகரித்துள்ளது அதாவது இப்போது அந்த சமையல் எரிவாயுவின் விலை 569 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.