புது பட ரிவியூ | தனுஷின் மாறன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன் போன்றவர்கள் நடித்து இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகியிருக்கும் படம் தான் மாறன். இந்த படத்துடைய திரை விமர்சனத்தை தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்த தனுஷ் அவருடைய தங்கச்சியை தன் மாமாவுடன் சேர்ந்து வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்குப்பிறகு அப்பாவைப் போல ஒரு பெரிய இன்வெஸ்டிகட் ஜேர்ணலிஸ்ட் ஆகிறார் தனுஷ். ஒருகட்டத்தில் தனுஷ் ஒரு பெரிய அரசியல்வாதியின் மீது கை வைக்க அதற்குப்பிறகு என்ன நடந்தது என்பதுதான்.

படத்தின் பலம் என்று எடுத்துக்கொண்டால் தனுஷ் மற்றும் அவரது தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட் இருவரையும் சொல்லலாம். இரண்டு பேரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். படத்தின் பாடல் மற்றும் பின்னனி இசை கூடுதல் பலம் என்று சொல்லலாம். இயக்குனர் எடுத்துக்கொண்ட முதல் பாதி கதை ஒரு நார்மல் கமர்சியல் மூவியாக அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் கலந்து செல்கிறது. இரண்டாம் பாதியில் படத்தின் கோணமே மாறுகிறது.

கடைசி அரைமணி நேரம் படத்தின் கதை எங்கெங்கோ செல்ல, கடைசியில் படம் முடியும்போது சுமார் என்கிற உணர்வைத்தான் தருகிறது. இயக்குனர் கடைசி அரைமணி நேரத்தில் சொல்ல வந்த அந்த கதையை படம் முழுக்க சொல்லி இருந்தாலும் இது அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்திருக்கும். ஆனால் அண்ணன் தங்கச்சி கதையை கொண்டுவந்து குழப்பி இந்த படத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியாத அளவிற்கு இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் முதல் பாதி வேறு படமும் இரண்டாம் பாதி வேறு படமும் பார்த்த பீல் தோன்றுகிறது. சொல்லப்போனால் படத்தில் இயக்குனர் சொல்ல வந்த விஷயம் கடைசி 15 நிமிடங்களிலேயே தொடங்கி முடிந்துவிடுகிறது. திரைக்கதையில் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணத்தையும் அது வரவழைக்கிறது.

மொத்தத்தில் கார்த்திக் நரேன்னிடமிருந்து மாஃபியா படத்தை தொடர்ந்து மீண்டும் அதே மாதிரியான ஒரு சுமார் படம்தான் இந்த மாறன்.

KKingwoods Rating :- 2.5/5

Spread the love

Related Posts

Viral Video | காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட ஸ்கூல் மாணவிகள் ?? | முடியை பிடித்து வெறியாட்டம் | இந்திய லெவல் ட்ரெண்டிங் ஆனா வீடியோ

பெங்களூருவில் ஒரு பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சியும் வைரலாக இணைய

சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் தராரு … | ஆதாரத்துடன் வெளியிட்ட சீரியல் நடிகை

சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்ரீநிதி தன்னை சிம்பு லவ் டார்ச்சர் செய்கிறார் என ஸ்க்ரீன் ஷாட்டை

யூடியூப் நிறுவனம் தங்களின் படைப்பாளிகளுக்கு கோடிக்கணக்கில் சன்மானம் வழங்கவுள்ளது | அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்

யூடியூப் நிறுவனம் போட்கேஸ்ட் கிரியேட்டோர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2.30 கோடி வரை பரிசு பணத்தொகை வழங்குவதாக

x