சிபாரிசின் அடிப்படையில் தான் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததா ? | பரபரப்பு கிளப்பியிருக்கும் ப்ளூசட்டை மாறன் ட்வீட்

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தேசிய விருது வாங்கிய சூரியா அவர்கள் சிபாரிசு மூலம்தான் பெற்றாரா என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.

நேற்று 68வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உலக தரத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு இந்திய படங்களுக்கு விருதுகளை அறிவித்தனர். அதில் தமிழ் திரைப்படமான சூரரை போற்று படத்திற்கு மட்டும் ஐந்து விருதுகள் கிடைத்தது. அதாவது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த திரைப்படம் என இத்தனை விருதுகளை வென்று குவித்தது. அதோடு நடிகர் சூர்யாவிற்கு கிடைக்கும் முதல் தேசிய விருது இதுதான். அப்படிப்பட்ட இந்த விருதை சூரியா சிபாரிசு பெற்று வாங்கி இருக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

“பொண்ணுங்க நாங்க இப்படி டிரஸ் இல்லாம போஸ் கொடுத்த நீங்க ஏத்துப்பீங்களா ?” பொங்கி எழுந்த பெங்காலி நடிகை

ஏனென்றால் வலை பேச்சு என்கிற youtube தளத்தில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் தான் பிஸ்மி. இவர் போட்டு உள்ள ஒரு பதிவில் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய திரைப்பட விருது தேர்வு குழுவில் இடம் பெற்றிருப்பதால், சூர்யாவுகோ அல்லது அவரது படத்துக்கோ விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என கோரி ஒரு குண்டை போட்டு இருக்கிறார். இவர் இந்த பதிவை சூர்யாவிற்கு விருது அறிவிப்பதற்கு முன்பே பதிவிட்டிருந்தார். தற்போதும் அதே போல் தான் சூர்யாவின் படத்திற்கு அவர் சொல்லி வைத்தது போல பல விருதுகள் கிடைத்துள்ளது.

தற்போது அந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து சூர்யாவிற்கு விருதினை அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்து பரப்பி வருகின்றனர். இந்த போட்டோ ப்ளூ சட்டை மாறன் கண்ணில் பட அதை தனது ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டு மிஸ்டர் சூர்யா இதற்காக உங்கள் ரிப்ளை என்ன என வார்த்தைகளை போட்டு பதிவிட்டு இருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு இணையதளம் எங்கும் தீயாய் பரவுகிறது. ஒருவேளை சூர்யா சிபாரிசு செய்துதான் இந்த விருதினை பெற்றிருக்கிறார் என்று சிலர் சந்தேகிக்க ஒரு சிலர் இப்படி எல்லாம் சிபாரிசு செய்து தேசிய விருதை வாங்க முடியாது தேசிய விருது என்பது சிறந்த கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் சூர்யா அதை சிபாரிசு செய்து வாங்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. அதனால் இதில் எது உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Spread the love

Related Posts

“TTF ஓட பவர் தெரியாம விளையாண்டுட்டு இருக்கீங்க…” எச்சரிக்கை வீடியோ போட்டு பரபரப்பை கிளப்பிய TTF வாசன்

“டிடிஎஃப் ஓட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாண்டுட்டு இருக்கீங்க” என்று நியூஸ் சேனல்களுக்கு வீடியோ

தன் உயிரை பொருட்படுத்தாமல் நாயின் உயிரை காப்பாற்றிய நபர் | குவியும் பாராட்டுகள்

உக்ரைன் நாட்டில் பனிக்கட்டி நீரில் உறைந்து போய் இருக்கும் நாயை ஒரு நபர் அந்த குளிரிலும்

உக்ரைன் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கால்

உக்ரைன் நாட்டில் தற்போது கடும் போர் நிலவி வரும் நிலையில் அங்கு உள்ள தமிழக மாணவர்கள்