இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய களம் பஞ்சாங்கத்தைப் பார்த்து தான் நேரம் அறியப்பட்டது என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து troll செய்யப்பட்ட வருகிறார் மாதவன்.
மாதவன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் ராக்கெட்ரி இந்த படம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளதாகவும் மேலும் ராக்கெட் சயின்ஸ் கதையை பற்றின ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இது வெளியாகும் என்று படக்குழு முன்னரே அறிவித்து இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். தற்போது இந்த படம் பற்றிய ஒரு விழாவில் பேசிய மாதவன் அவர்கள் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய கலம் 32 ஆவது முறை தான் வெற்றிகரமாக முடிந்தது.

அப்போது பஞ்சாங்கத்தைப் பார்த்து தான் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் அளவினை சரியாக பயன்படுத்தி அந்த நேரத்திற்கு தகுந்தாற் போல களத்தை செலுத்தியதால் தான் அப்போது வெற்றியடைந்தது என கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை நம்பி நாராயணனின் மருமகனும் மற்றும் விஞ்ஞானியுமான அருண் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் நம்முடைய பழைய காலத்து முன்னோர்கள் எவ்வளவு கண்டுபிடித்துள்ளனர் நாம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றுவரை இருந்திருக்கிறோம். ஆனால் நமக்கும் ஒரு படி மேலே போய் அவர்கள் நிறைய யோசித்து இருக்கின்றனர்.

இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல சில விஷயங்களை அவர்கள் அப்போதே செய்திருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் திறமையான அவர்களையும் நாம் கண்டு கொள்ள வேண்டும் என இவ்வாறாக அவர் பேசியிருந்தார். ஒரு ராக்கெட் விஞ்ஞானத்திற்கு ஹிந்து முறைப்படி வரையப்பட்ட பஞ்சாங்கம் உதவிகரமாக இருந்தது என இவர் சொல்லி அதை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர். அது எப்படி ஒரு சயின்ஸ் விஷயத்திற்கு ஆன்மீகம் விடையாக அமையும் என கலாய்த்து வருகின்றனர்.
When panjakam plays a important role in Mars mission #Madhavan #MarsMission #science #technology #sciencefiction pic.twitter.com/tnZOqYfaiN
— கல்கி (@kalkyraj) June 23, 2022