“இந்துக்களை அவமதிக்கும் நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” – மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு

மதுரை பழங்காநத்ததில் நடைபெறும் விசுவ இந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசினார் அப்போது பேசிய அவர் “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் சாலமன் பாப்பையா பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்லும்போது தருமை ஆதீனத்தை ஏன் பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் மதுபான கடைகள் அதிகமாகி வருகிறது. பாரதியார் மட்டும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்து இருந்தால் அவர் பாடிய பாடல் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே” எனதான் பாடி இருப்பார் என கூறியிருக்கிறார்.

“அண்ணாமலைக்கு கூடுவது காக்கா கூட்டம்” | சரமாரியாக விமர்சனம் செய்த செல்லூர் ராஜு

தமிழ்நாட்டுடைய பண்பாட்டு கலாச்சார கோயில்கள் தான். ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள். ஆன்மிகவாதிகள் அரசியல் பேசவில்லை என்றால் மற்ற யார் தான் பேசுவார் என்ற கேள்வி கேட்டுள்ளார். முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை ? இந்து சமய அறநிலைத்துறை கோவிலில் உண்டியல் காசு போடாதீர்கள் அந்தப் பணம் முழுவதும் கோயிலுக்கு செல்வதில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.

திராவிடம் என்பதற்கு அர்த்தம் என்ன என சீமான் கேள்விக்கு தற்போது வரை யாரும் பதில் சொல்லவில்லை திராவிடப் பாரம்பரியம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மருகிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக் கொள்கிறார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறார். கோயில் நம்மை விட்டுப் போனால் நமது சமுதாயமும் நம்மைவிட்டுப் போனது போல் தான் ஆகும். இந்த கோவில் நிலங்கள் எல்லாம் கட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். குத்தகை கேட்டால் குத்துவதற்கு கையும் அடியாட்களும் வருகின்றனர். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என கூறி வருகின்றனர் என அவர் பேசியுள்ளார்.

Spread the love

Related Posts

இந்து கடவுளை அவமதித்த திமுக செக்ரட்டரி | வெளுத்து வாங்கும் பாஜக-வினர் | காரணம் என்ன ?

இந்து கடவுளை அவமதிப்பது போல் ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்

“அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் பொது மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது” – ஸ்டாலின் கோரிக்கை

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழக மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அரசியல்வாதிகளின் பணிகளைப் பற்றியும் அரசு

100 முறை காவேரியில் குளித்த புண்ணியத்தை தரும் தமிழ்நாட்டு அற்புத கோவில்

காவேரி கங்கை போன்ற ஆறுகளில் குளிப்பது புண்ணியம் என்று அனைவரும் அறிவர்…அப்படி அணைத்து மக்களும் தன்