சன் டிவி தொகுப்பாளனி மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திடீரென திருமணம் செய்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி இரும்தார்.
நட்புனா என்னன்னு தெரியுமா முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற. படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தயாரிப்பாளர் என்பதைவிட பிக் பாஸ் வனிதாவை பற்றிய பேசி பிரபலமடைந்தார். பீட்டர் பால் மற்றும் வனிதா குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசியும் இவர் ட்ரெண்ட் ஆனார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த போட்டோக்கள் இணையதளத்தில் பரவி வைரல் ஆனது.
சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் மகாலட்சுமி. இல்லத்தரசிகளுக்கு இவரின் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் முதல் முதலாக அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாமரை, வாணி ராணி, தேவதையை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவர் 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.
மரத்தடியில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கஞ்சா இழுக்கும் திருவண்ணாமலை பள்ளி மாணவர்கள்

இவர் ஒரு சீரியலில் நடித்ததன் மூலம் மகாலட்சுமிக்கும் அந்த சீரியலில் நடிக்கும் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருக்கிறது என்று அந்த நடிகருடைய மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அந்த நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் ரவீந்தரை மணந்த நடிகை மகாலட்சுமியின் சம்பள விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி நாம் பார்க்கும் போது இவர் ஒரு மாதத்திற்கு மூன்று லட்சம் வரை சம்பளமாக வாங்குவது தெரிய வந்துள்ளது. இது சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் ஆகும். இது தவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அதற்கு தனி சம்பளம் வாங்குகிறார். ஏறத்தாழ ஒப்பிட்டு பார்க்கும்போது நான்கு லட்சங்களை ஒரு மாதத்திலேயே சம்பாதிக்கும் நிலையில் தான் மகாலட்சுமி இருக்கிறார்.
