தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் மற்றும் தெலுகு உலகின் சூப்பர் ஸ்டார் ஆன மகேஷ் பாபுவின் தாயான இந்திரா தேவி காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலக் குறைவாக இருந்து வந்தார் என மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் அவரின் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை நாலு மணிக்கு இந்திரா தேவி உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
புர்கா அணிய மறுத்த தனது இந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்

இந்திரா தேவிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் காலமானார் தற்போது அடுத்த சில மாதங்களிலே இவரது அம்மாவும் காலமாகி இருப்பது மகேஷ்பாபுவிற்கு நீண்ட துயரத்தை தந்துள்ளது. அவருடைய ஒரு வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மகேஷ்பாபு நீண்ட துயரத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவருடைய முகத்திலேயே ஒரு பெரிய விஷயத்தை நாம் இழந்து விட்டோம் என்ற சோகத்தை நம்மால் காண முடிகிறது. அதன் பிறகு மடியில் உட்கார வைத்து தன்னுடைய உறவினர் பெண்ணையும் சமாதானப்படுத்துகிறார். தற்போது இந்த வீடியோவை பார்த்து மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மட்டுமல்லாத திரை உலக ரசிகர்களே உடைந்து போய் இருக்கின்றனர். சீக்கிரம் மகேஷ் பாபு இதிலிருந்து மீண்டு வந்து ஆக வேண்டும் என்று எல்லோரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
His pain …. 💔🥺
— Mummidivaram_MBFC🔔🚩 (@MmdMaheshFC) September 28, 2022
Anna stay strong anna @urstrulyMahesh 🥺#RIPIndiraDeviGaru pic.twitter.com/ycZW7U8nDg
தற்போது மகேஷ்பாபுவின் தாயாருக்கு திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
