உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் ஒருவரை நடுரோட்டில் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஒரு நபரை இரண்டு பேர் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு செல்கின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ந்து போனார். ஆனால் ஒருவர் கூட அவரை காப்பாற்ற முன்வரவில்லை. ஏனென்றால் இரண்டு நபரும் கையில் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் அச்சப்பட்டனர். பின்பு குத்திவிட்டு சென்ற அவர்கள் கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்த நபருக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்று தெரிந்தும் மீண்டும் ஓடி வந்து அவரை முதுகில் குத்தி கழுத்திலும் 2 குத்து கத்தியால் குத்தி அவரை துடிதுடித்து உயிரிழக்க செய்தனர்.
Viral Video | தமிழக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன் செய்யும் அட்டுழிய விடியோக்கள் வைரல்

ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் துடிதுடித்து உயிரிழந்த அவரை அந்த மர்ம நபர்கள் சென்ற பிறகும் யாரும் காப்பாற்றவோ ஆம்புலன்சுக்கு போன் செய்யவோ முன்வரவில்லை. வீடியோ காட்சியை பார்த்த போலீசார் இது ஒரு குடும்ப தகராறு எனவும் வெட்டியவன், உயிரிழந்தவரின் மாமன் தான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.