இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக்கொண்டதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழையாறு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. லாரி கிளீனராக பணியாற்றி வந்துள்ளார்.
பாலாஜி அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் கொண்டவர். நேற்று இரவு இடுக்கிக்கு பொருட்களை கொண்டு சென்ற பாலாஜி அங்கேயே தங்கி உள்ளார். இரவு உணவுக்காக டிரைவரும் இவரும் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது பரோட்டா பாலாஜியின் தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக்க புது ட்ரிக்ஸா ? | திமுக எம்.எல்.ஏ வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

இதனால் அதை விழுங்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் துடிதுடித்தார் பாலாஜி இதனால் செய்வதறியாது பதறிப்போன டிரைவர் உடனடியாக பாலாஜியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி உயிரிழந்தார். 34 வயதான பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும் அர்ஜுன், அஸ்வின் என இரு மகன்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
