உக்ரைன் நாட்டில் பனிக்கட்டி நீரில் உறைந்து போய் இருக்கும் நாயை ஒரு நபர் அந்த குளிரிலும் தன்னலத்தை அறியாமல் நாயின் உயிரை காப்பாற்றிய இந்த நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இணையதளங்களில் எப்போதும் மனிதரும் விலங்குகளும் விளையாடும் வீடியோக்கள், மற்றும் விலங்குகளின் சுட்டித்தனமான வீடியோக்களும் நிறைய அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் விலங்குகள் ஏதாவது அச்சுறுத்தலில் இருக்கும்போது சில நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அதை காப்பாற்றும் பொருட்டு தன்னையும் அறியாமல் சில வீர சாகசங்களை செய்து அந்த விலங்குகளை மீட்பர் அப்படியான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று உள்ளது. உக்ரைன் நாட்டின் டொன்ஸ்டேக் பகுதியில் ஒரு ஏரி உள்ளது அந்த ஏரி குளிரின் காரணமாக முழுவதுமாக அப்படியே உறைந்து போன நிலையில் காணப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு ஏரியில் ஒரு நாய் அதன் நட்ட நடுவில் தண்ணியில் விழுந்து மாட்டிக்கொண்டு வெளியே வர பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற ஒரு நபர் அதை பார்த்ததும் அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று தன்னலத்தை அறியாமல் அவரின் சட்டையை கழட்டி விட்டு உடனே அந்த நாயை மீட்க ஏரியில் இறங்கினார், சிறிது நேரம் கழித்து அந்த நாயை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு கைதட்டல்களை கொடுத்தனர் மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட் அவரை பாராட்டி வருகின்றனர்.