மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் கூல் காய்ச்சும் போது காக்கா வலிப்பு வந்த ஒருவர் அந்த அண்டாவில் தவறி விழும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு கோவில்களில் ஆடி மாதம் என்றாலே விழா கோலம் கொண்டு விடும். மேலும் அந்த மாதத்தில் சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்படும். அதனால் அப்போது கூல் காய்ச்சும் வழக்கம் உண்டு. அப்போது மதுரையில் அப்படி ஒரு நிகழ்வில் நடந்த ஒரு விபத்தில் சிசிடிவி காட்சி தான் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த மேல் தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு கூல் காய்ச்சப்பட்டது. அப்போது முத்து மாரியம்மன் தரிசிக்க பொதுமக்கள் வரிசையாக நின்றனர். அந்த நேரத்தில் தான் இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திடீரென காக்கா வலிப்பு வந்து ஒருவர் நிலை தடுமாரி அப்படியே கூல் காய்ச்சும் அண்டாவிற்குள் விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அங்கு இருந்த மக்கள் பதறி அடித்து அவரை தூக்க முற்பட்டனர்.

ஆனால் எவ்வளவு சிரமப்பட்டும் அவரை வெளியே எடுக்க முடியவில்லை. அதனால் அந்த அண்டாவை அப்படியே கீழே சாய்த்து அவரை கடைசியாக வெளியே எடுத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறி விட்டனர். கூலில் விழுந்து காயம் காரணமாக அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.
மதுரை பழங்காநத்தம்
— வழக்கறிஞர் கவிஸ்ரீ. தினேஷ் (@kavisri_dinesh) August 2, 2022
முத்துகுமார் என்பவர், நேற்று நிதானம் இழந்து சூடாக கூழ் காய்ச்சிய அண்டாவில் தவறி விழுந்தார். மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். pic.twitter.com/0QiWwsHjqm