25 வயதுடைய மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண்கள் விடுதியில் அவர்களின் குளிக்கும் அறையை நோட்டம் விட்ட தால் போலீசார் பிடித்து சென்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் 25 வயது நேபாளத்தை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதோடு மட்டுமல்லாமல் பெண்கள் குளியலறைக்கும் சென்றுள்ளார். இதனால் பதட்டம் அடைந்த பெண்கள் விடுதி காப்பாளர் இதுகுறித்து தகவலை தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த விடுதி காப்பாளர் அவரை பிடிக்க சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடியவரை மடக்கிபிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து அங்கேயே போலீசுக்கும் இது குறித்த கவலை தெரிவித்தனர்.

போலீஸ் அங்கே வந்து அந்த நபரை பிடித்து சென்றனர் பின்பு இந்த நபர் யார் எங்கிருந்து வந்து இருக்கிறார் என்று தெரியவில்லை என்பதற்காக தாம்பரம் போலீசார் அங்கிருந்த அந்த நபரை பெருங்களத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் விட்டுவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் இவரைப் பார்க்க அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் பெருங்களத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். பெருங்களத்தூர் போலீசார் இவரை பிடித்து விசாரித்ததில் இந்த நபரை தாம்பரம் போலீசார் தான் இங்கு விட்டுவிட்டுச் சென்றனர் என அவர் கூறியுள்ளார். இதனை அறிந்து பெருங்களத்தூர் போலீசார் உடனே தாம்பரம் போலீசாருக்கு இது குறித்த தகவலை வெளியிட்டு தற்போது அவரை போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
