“Facebook மட்டும் இல்லாம இருந்த நான் நல்லா இருந்திருப்பேன் | இப்போ என்ன யாரும் மதிக்கல, மீடியா பக்கம் வந்ததே தப்பு” – அழுது புலம்பும் மண்ணை சாதிக்

பேஸ்புக் என ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நான் நன்றாக சம்பாதித்து இருப்பேன். அக்கம்பக்கத்தினர் என்னை நல்ல மரியாதையுடன் பார்த்திருப்பார்கள் என புலம்புகிறார் டிக் டாக் பிரபலம் மண்ணை சாதிக்.

தற்போது எப்படி காத்து கருப்பு கலை, ஜிபி முத்து, ஆகியோர்கள் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறார்களோ அந்த மாதிரி ஒரு காலத்தில் சமூக வலைதளத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் மண்ணை சாதிக். இவருடைய வீடியோக்கள் இல்லாமல் அந்த நாளே கழியாது என்ற அளவிற்கு ட்ரெண்ட் ஆனவர். அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். தற்போது இருக்கும் இடம் தெரியாமலேயே காணாமல் போய்விட்டார். அனைவரின் வாழ்க்கையிலும் கடினமான நேரத்தை ஏற்படுத்தியது லாக்டவுன் தான்.

அதேபோல இவரது கதையிலும் லாக்டவுன் தான் எதிரி லாக்டவுனுக்கு பிறருக்கு இவரது மீடியா ரசிகர்கள் குறைந்து விட்டனர். சமீபத்தில் ஒரு தனியார் சேனலில் இவரது குடும்ப சூழ்நிலை குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். இவர் குவைத்தில் ஒரு டெலிவரி பாயாக வேலை செய்து வந்தாராம். ஓய்வு நேரங்களில் பேஸ்புக் லைவ் போட்டு வந்துள்ளார். அப்போது இவரை பாலோவர்ஸ் திட்டுவதும் பதிலுக்கு இவர் திட்டுவதும் வழக்கமாய் இருந்தது. இப்படியே வைரலான இவர் சமூக வலைதளங்களில் மூளை முடுக்கு எங்கும் பிரபலமடைந்தார்.

பிறகு சினிமா வாய்ப்புகளும் கைகூடி வர இருபது படங்களில் இவர் நடித்திருந்தார். ஆனால் அதில் ஐந்து படங்களில் மட்டுமே இவர் நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விட்டுப்போன படங்களில் விஜயின் பிகிலும் சந்தானத்தின் a1 படமும் ஒன்று. 2018ல் ஆரம்பித்து 2020 வரை மீடியா தான் லைஃப் என்று இருந்த இவரது வாழ்க்கையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தலைகீழானது. கொரோனா வந்ததால் பட வாய்ப்புகளை இழந்த இவர் சமூக வலைதளங்களிலும் அவுட்டேட்டட் ஆகிவிட்டார். மேலும் அவரது குடும்பம் பற்றி அவர் கூறுகையில் எனக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளது. வீட்டு செலவுகளை கூட பார்த்துக் கொள்ள முடியவில்லை நிறைய இழந்து போயிட்டேன். பேஸ்புக்கில் லைவ் போட மட்டுமே தெரியும்.

“உண்மையாகவே அஜித் சார் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” – அஜித்தையும் அவரது ரசிகர்களையும் புகழ்ந்து பேசிய திருச்சி DC ஸ்ரீதேவி

நான் வெளிநாட்டில் இருந்த போதும் நன்றாக சம்பாதித்தேன். எப்போது இந்த மீடியாவுக்குள் வந்தேனோ என் நிலை தலைகீழாக மாறிவிட்டது. அம்மா அப்பாவுடன் சண்டை, அதனால் சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் தங்குகிறேன். டிவி சேனல்கள் மூலம் வாங்கியது தான் மிக்ஸி கிரைண்டர் எல்லாமே விஜய் டிவி, வசந்த் டிவி போன்றோர்கள் எனக்கு பரிசளித்தது தான் நான் வீட்டில் வைத்துள்ளேன். வீட்டில் டிவி பழுதாகி பழுது பார்க்க கூட காசு இல்லாமல் ஒரு வருடமாக அப்படியே இருக்கிறது. நான் நல்லா சம்பாதித்து கொண்டிருந்தேன் இப்போது நான் மோசமாக உள்ளேன் சினிமா என்னை கொண்டு போகப் போகிறதா இல்லை திரும்பி ஃபாரின் போகப்போகிறேன என்று தெரியவில்லை.

குழந்தைகளின் சின்ன சின்ன தேவைகளை கூட என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று புலம்பி அழுகிறார் மண்ணை சாதிக். இப்போது எனக்கு குடும்பம் குழந்தைகள் பசி இவை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. நான் வெளிநாட்டில் இருந்தால் கூட இந்நேரம் வீடு கட்டி இருப்பேன் மீடியாவை நம்பி வந்ததால் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். இந்தப் பக்கம் வராமல் இருந்திருந்தால் மார்க் பேஸ்புக் என்று ஒன்றை கண்டுபிடிக்காமல் இருந்தால் நான் ஒழுங்காக சம்பாதித்து இருந்திருப்பேன்.

வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் எனக்கு நல்ல மரியாதை கிடைத்திருக்கும் ஒரு படத்தில் சின்ன செக்மெண்டில் தானே நடிக்கிறாய் என்று என் வீட்டில் இருப்பவர்களே என்னை குறை கூறுகின்றனர். ஏன் குடும்பத்தினர் என்னுடைய எந்த பட த்தையும் பார்த்ததே இல்லை. காசு இல்லை என்றால் யார்தான் மதிப்பார்கள் ? என் பசங்க கேட்பதை கூட என்னால் வாங்கி தர முடியவில்லை. குழந்தை ஸ்கூல் பேக் வாங்குவது போல் என்னிடம் பணம் இல்லை என் கஷ்டத்தை வெளியே சொன்னால் பிச்சை எடுக்கிறேன் என்று பதிவு போடுகிறார்கள் மிகவும் வேதனையாக உள்ளது என உருக்கமாக பேட்டி அளிதார் மண்ணை சாதிக்

Spread the love

Related Posts

ஷவர்மாவால் மறுபடியும் நேர்ந்த ஒரு அசம்பாவிதம் | இந்த முறை தமிழகத்தில்

கேரளாவை அடுத்து தமிழகத்திலும் சவர்மாவால் 3 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களுக்கு

Viral Video | “திரை தீப்பிடிக்கும்….” பீஸ்ட் மோடில் இருந்த விஜய் ரசிகர்கள் மெய்யாலுமே திரைக்கு தீ வைத்த கொடுமையை பாருங்கள்

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என பீஸ்ட் படத்தில் வரும் லிரிக்ஸை உண்மையாகவே செய்து காட்டியுள்ளனர்

காமெடி நடிகர் போண்டாமணிக்கு தீடீர் இதயக்கோளாறு | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வடிவேலுவுடன் பல படங்களில் அவருக்கு இணையாக நடித்த காமெடி நடிகர் போண்டாமணிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்

x