இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் பாஜக அரசையும் எதிர்ப்போம் என மன்னார்குடி ஜீயர் பரபரப்பாக பேசியுள்ளார்.
கடந்த மாதம் தஞ்சை அருகே கலிமேடு கோவில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிட வந்தார் மன்னார்குடி ஜீயர் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என கூறி அதற்கான கண்டனங்களையும் பெற்றார்.

இந்த பேச்சுக்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிட கழகம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மகளிர் காவல் நிலையத்தில் தற்போது ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது :- “இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிட கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் நாங்கள் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார் மன்னார்குடி ஜீயர்.
மேலும் பேசிய அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் விவாகரத்தில் தமிழக அரசு தலையிடுவது விரோத செயலாகும் எனவும் கூறியிருக்கிறார்.
