மாரிமுத்து 15 நாளா வீட்டுக்கு வரல.. வீட்டில் வேலை செய்யும் பெண் சொன்ன ரகசியங்கள்

பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். அவருடைய மறைவிற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் வீட்டில் வேலை செய்யும் பவானி என்கிற பெண் நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து 15 நாட்களாகவே வீட்டிற்கு வரவில்லை. நேற்று தான் வீட்டிற்கு வந்தார் என்று அந்தப் பெண் கூறி இருக்கிறார். அதோடு மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜோதிடர் சாபம், மாரிமுத்து மர்மம் அதிர்ச்சியில் டாக்டர்கள்… இடுப்புக்கு மேல பிரச்னை இருக்கு’ உடைக்கும் உண்மைகள்… click here

சீரியலில் வில்லனாக மிரட்டி கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. ஒரு ஜாலியான கேரக்டர் என்பது அவருடைய பல பேட்டிகளில் பலருக்கும் தெரிஞ்சதுதான். சீரியலில் மட்டும் தான் குணசேகரனாக பெண்களை அடிமைத்தனத்தோடு நடத்தும் நபராக இருப்பார். ஆனால் பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசுபவராகவும் முற்போக்கு சிந்தனையாளராக தான் நடிகர் மாரிமுத்து இருந்து வந்தார்

இந்த நிலையில் அவருடைய திடீர் மரணம் அவருடைய தீவிரமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர்கள், நடிகர்கள் என பலரும் அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. இந்த நிலையில் அவருடைய வீட்டில் 10 வருடங்களாக பணி செய்து வரும் பவானி என்கிற பெண் நடிகர் மாரிமுத்து பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதில் நடிகர் மாரிமுத்து சினிமாவில் மட்டும்தான் கோபக்காரராக நடிக்கிறார். ஆனால் வீட்டில் ரொம்பவே ஜாலியான கேரக்டர். என்னிடம் தங்கச்சி என்கிற வார்த்தைக்கு மறுபேச்சு பேசினதே கிடையாது.

மாரிமுத்து மரணத்திற்கு இதுவும் காரணமா? எதிர்நீச்சல் சீரியலில் இதை கவனீச்சிங்களா? click here

என்னை எப்போதும் வீட்டில் வேலை பார்க்கிற பெண் என்று நடத்துனதும் கிடையாது. என்னை பார்க்கும்போதெல்லாம் சாப்டியா பவானி என்ற வார்த்தை தான் முதலில் கேட்பார். பிறகு தான் வேறு எதுவும் சொல்லுவார். ஆனால் சீரியலில் அவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார் தவிர நிஜத்தில் அப்படியெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது.

வீட்டில் அவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்வார். நமக்கும் நல்லது கெட்டது எல்லாமே சொல்லித் தருவார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசினால் கூட பல விஷயங்கள் நம்மிடம் பேசிக் கொண்டே இருப்பார்.

மனதில் பட்டதை டக்கென்று சொல்லிவிடுபவர். மனதுக்குள் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே எங்கேயுமே வேறு விதமாக பேசவே மாட்டார். நான் பத்து வருஷங்களாக இந்த வீட்டில் இவர் அவரை பார்த்து இருக்கேன். ஆனால் இப்படி ஒரு நபரை வேறு எங்கும் பார்த்ததும் கிடையாது.

மாரிமுத்து கடைசி நொடிகள்… தானே காரில் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் பிறகு நடந்த அதிர்ச்சி click here

ஆனால் இப்போ 15 நாளாக சூட்டிங் போயிருந்த மாரிமுத்து சார் வீட்டிற்கு வரவில்லை. நேத்து காலையில் தான் வீட்டிற்கு வந்தார். வந்ததும் மறுபடியும் வேலைக்கு போயிருந்தார். ஆனால் அவருக்கு அப்போதே லேசாக வலி இருந்திருக்கு.

அதை பத்தி எதுவுமே வெளியே சொல்லாம இருந்திருக்காரு. ஆனா இப்படி ஆகணும் நாங்க எதிர்பார்க்கல. நான் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு கூட மாரிமுத்து சார் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவுனாரு.

ரொம்பவே தங்கமான மனுஷன். அவருடைய குடும்பத்தை இந்த மாதிரி ஒரு நிலைமையில என்னால பார்க்க முடியல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏற்கனவே மாரிமுத்து சாருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்து பிறகு சிகிச்சை எடுத்து குணம் ஆகிவிட்டார். என்று அந்த பேட்டியில் பவானி என்கிற பெண் பேசி இருக்கிறார்.

Spread the love

Related Posts

“ஹல்லா போல் கொஞ்சம் எல்லோ போல்”… சென்னை அணிக்கு ஆதரவு கொடுக்கும் அஸ்வின் | வீடியோ உள்ளே

ஹல்லா போல் கொஞ்சம் எல்லோ போல் என்று ராஜஸ்தான் அணி வீரர் அஸ்வின் சென்னை அணிக்கு

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி.. அதிரடியாக களமிறங்கிய அண்ணாமலை

பிரதமரின் சென்னை வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநரிடம் மனு

நயன்தாரா திருமண நிகழ்வில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

விக்கி மற்றும் நயன்தாரா தம்பதிகளின் கல்யாணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடைபெறுகிறது. அங்கு ஏராளமான

Latest News

Big Stories