நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். டப்பிங் பணியின் போது ஏற்பட்ட அசௌகரியத்தை தொடர்ந்து, அவரே மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்று அட்மிட் ஆகியுள்ளார்.

விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நடிகர் மாரிமுத்துவுக்கு இன்று காலை சரியாக 8.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் அவரது மனைவி பாக்கியலட்சுமியிடம் மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு தானாகவே கார் ஓட்டி வந்து வடபழனி சூர்யா மருத்துவமனை பார்க்கிங்கில் விட்டுவிட்டு சிகிச்சைக்காக நடந்து சென்றுள்ளார்.

மேலும், தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறிக் கொண்டே சென்று அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் சில நிமிடங்களிலேயே பிரிந்தது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் மதியம் 3 மணி வரை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் சொந்த ஊர் என்று தேனி மாவட்டம் வருசநாடுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.