திருமணமான பெண்கள் அதிகமாக இணையதளத்தில் தேடும் விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி கூகுள் தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் நிறைய விஷயங்களும் அடங்கியிருக்கிறது.
கூகுள் நிறுவனம் எல்லா ஆண்டும் அந்த வருடத்திற்கான அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் என்ன என்பதை பட்டியலிட்டு நமக்கு கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் திருமணமான பெண்கள் அதிகமாக கூகுளில் தேடுவது என்ன என்பதை பற்றி, கூகுள் சர்ச் எப்படி செய்திருக்கிறார்கள் எதை அதிகமாக தேடி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் திருமணமான பெண்கள் அதிகமாக கணவனை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்பதை அதிகம் தேடி எடுக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து கணவரை கையாள்வது எப்படி என்றும், அவரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர், மேலும் குடும்ப கட்டுப்பாடு எப்போது செய்ய வேண்டும் குழந்தை பிறக்க சரியான நேரம் எது இப்படியான கேள்விகளை அடுக்கி இருக்கின்றனர். மேலும் திருமணம் ஆகி மாமியார் வீட்டிற்கு சென்றால் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் குடும்ப பொறுப்புகளை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் தேடி இருக்கின்றனர். குறிப்பாக திருமணத்திற்குப் பின்பு வேலையையும் குடும்பத்தையும் எப்படி சரிசமமாக சமாளிக்க வேண்டும் என்பதையும் கூகுளில் தேடி இருக்கின்றனர். தற்போது புதிதாக திருமணமான பெண்கள் இப்படி எல்லாம் தேடி இருக்கிறார்கள் என கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது
