சென்னை மேயர் பிரியாவிடம் அமைச்சர் நேரு உங்களை ஒருமையில் பேசியதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு தற்போது பதில் அளித்திருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை மேயர் பிரியாவும் திமுக அமைச்சர் கே என் நேருவும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேச ஆயத்தமாகி கொண்டிருந்த கே என் நேருவைப் பார்த்து சற்று பேசலாமா வேண்டாமா என்று ஒரு தோணியில் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பேசுமா என்று மிகவும் ஆர்டர் போடும் வகையில் அவருக்கு பதில் கூறியிருக்கிறார் அமைச்சர். இந்த வீடியோவானது தற்போது வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் வைரல் அடித்துவருகிறது.

திமுகவில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் சுதந்திரம் இதுதானா ? என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். அதனால் இதைப் பற்றி மேயர் பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறிய பதில் என்னவென்றால் கே என் நேரு அண்ணா என்னை ஒருமையில் பேசியதாக நான் நினைக்கவில்லை, உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். மேலும் பேசியவர் :- “நேரு அண்ணா கழகத்திலேயே மூத்த அமைச்சர் மிகவும் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஒரு அண்ணன். அவர் என்னை எப்போதுமே தன்னுடைய மகள் போன்று தான் நினைப்பார். என்னை எப்போதும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். அதனால் அவர் என்னை அப்படி பேசியதை நான் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை. அது ஒரு உரிமையில் பேசியதாக தான் நான் நினைக்கிறேன்” என அதற்கு தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறார்.
