நீதிமன்றத்திற்கு அல்வா கொடுத்து விட்டு தலைமறைவான மீரா மிதுன் | போலீசார் வலைவீச்சு

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா தற்போது தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சினிமாவில் இருக்கும் பட்டிலினம் மற்றும் பழங்குடியினர் மக்கள் முன்னேறவே இல்லை என பல தேவையற்ற கருத்துக்களை யூட்யூபில் பேசியுள்ளார். இதற்காக நடிகை மீரா மிதுன் மீதும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் எனக்கு உதவியிருப்பார், வைரமுத்து மீது மீண்டும் குற்றசாட்டு வைத்த பாடகி சின்மயி

பின்னர் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இருந்தனர். சென்னை முதன்மை நிதிமன்றத்தில் இருவரும் மீதும் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிபதி எஸ் அல்லி முன்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டும் தான் ஆஜராகி இருந்தார். அவருடைய காதலியான மீரா மிதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இந்த வழக்கு நேற்று மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானார்.

அப்போது காவல்துறையினர் சார்பில் ஆஜராகி சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் பிடிவாரண்ட் மீரா மிதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும் தற்போது அவர் எங்கேயோ தலைமறைவாக பதுங்கி இருப்பதாகவும் நாங்கள் விரைவில் அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம் என்றும் கூறியிருக்கின்றனர். தற்போது இந்த வழக்கு செப்டம்பர் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஸ்ரீதேவி தள்ளி வைத்துள்ளார்.

Spread the love

Related Posts

“இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக சித்தரிக்காதீர்கள்…. ” பீஸ்ட் படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

நடிகர் விஜய் நடித்த ஏப்ரல் 13ம் தேதி வெளிவரவுள்ள பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி

Viral Video | “20 ரூபா குடுத்து தேசிய கொடி வாங்குனாதான் உனக்கு ரேஷன் பொருள் தருவோம்….” ஹரியானாவில் அதிர்ச்சி, பொதுமக்கள் குற்றசாட்டு

20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடியை வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என கூறியதால்

Viral Video | 200 அடி பள்ளத்தாக்கில் சீக்கி கொண்ட இளைஞன் | துரிதமாக செயல்பட்டு மீட்ட விமான படையினர்

கர்நாடக மாநிலத்தில் இருக்கிற பிரம்மபுரி மலைத்தொடரில் பாறைகள் அதிகளவில் காணப்படும். இந்த மலைத்தொடரில் பலதரப்பட்ட ஊரிலிருந்து