தமிழக பேருந்துகளில் இனிமேல் இ-டிக்கெட் மூலம் கூகுள் பே அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஆப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசியபோது :- “பேருந்துகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் வழக்கமான பயணம் செய்வதற்கு பதிலாக இ-டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்த உடனேயே கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்.
மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது என கூறியுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
