கடவுளின் நாமம் சொல்வது, மந்திர ஜபம் செய்வது ஆன்மிகவாதிகள் மட்டுமே செய்ய வேண்டியது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் நாமத்தை உச்சரிப்பதால் என்னவெல்லாம் பலன்கள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இறை நாமங்கள் சொல்வதால் சாமானி மனிதரும் கூட இறைவனுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆக முடியும்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைசுழலில் சுற்றி இருப்பவர்களுடன் கூட யாருக்கும் பேசவோ, உறவுகளுடன் நேரம் ஒதுவதற்கோ கூட நேரம் இல்லாமல் போயிற்று. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எத்தனையோ விதமான பணிகளை நாம் செய்கிறோம். இதில் நமக்காக கூட சிறது நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறோம். இதில் இறைவனை நினைப்பதற்கு எங்கிருந்து நேரம் ஒதுக்குவது என பலரது கேள்வி

ஆனால் தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் இறைவனை வழிபட வேண்டும். ஏதாவது இறை நாமத்தை உச்சரிக்க வேண்டும் என இந்து மத தர்மம் சொல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இறை வழிபாட்டிற்கும், இறை நாமத்தை சொல்வதற்கும் நாம் ஒதுக்க வேண்டும் என சனாதன தர்மம் சொல்கிறது. இப்படி தினமும் ஒரு மணி நேரம் இறைவன் நாமத்தை உச்சரிப்பதற்காக ஒதுக்கினால் என்ன நடக்கும்? அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? என உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் இதோ…
- ஒரு மணி நேரம் கடவுளுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்.
- ஒரு மணி நேரம் நீங்கள் செய்த பாவத்தை போக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
- ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி நீங்கள் ஒரு சில படிகள் முன்னேறுகிறீர்கள்.
- ஒரு மணி நேரம் நீங்கள் பக்தி நிறைந்தவராகி விடுகிறீர்கள்.
- ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
- ஒரு மணி நேரம் மனத்தூய்மையுடன் ஒழுக்கமானவராகி விடுகிறீர்கள்
- இறை நாமம் சொல்லும் இந்த ஒரு மணி நேரம், நீங்கள் செய்த பாவங்களை இறைவன் மறந்து, உங்களின் நாம ஜபத்தை காது கொடுத்து கேட்கிறார்.
- ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
- ஒரு மணி நேரம் கங்கையில் குளித்த தூய்மையை பெறுகிறீர்கள்.
- ஒரு மணி நேரம் கோடான கோடி புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்கள்.
- நாமம் வேறு, பகவான் வேறு இல்லை என்பதால் இந்த ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் பாக்கியத்தை பெறுகிறீர்கள்.

தொடர்ந்து ஒரு மணி நேரம் உங்களால் இறை நாமத்தை சொல்ல ஒதுக்க முடியவில்லை. அது கடினமான விஷயம் என்று நினைத்தால், காலை எழுந்ததும் எத்தனை முறை முடியும் அத்தனை முறை உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமம் அல்லது உங்களுக்கு தெரிந்த இறை நாமத்தை சொல்லலாம். தொலைப்பேசியில் பேசத் துவங்குவதற்கு முன் இறை நாமத்தை சொல்லி பேச துவங்கலாம். ஒருவரிடம் பேச துவங்கும் முன்பும், பேசி முடித்த பிறகும் இறை நாமத்தை சொல்லலாம். இது சாதாரணமாகக் கூட தெரியாலாம். ஆனால் இப்படி செய்வதால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 108 முறையாவது இறை நாமத்தை நீங்கள் சொல்லி இருப்பீர்கள். எந்த ஒரு இறை நாமத்தையும் 108 முறை ஜபித்தால் அதற்கு சக்தி வரும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
விஷ்ணு மந்திரம்:
ஓம் விஷ்ணுவே நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணா ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.
பாவம் நீக்கும் சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
1. பஞ்சாட்சர சிவ மந்திரம் :
ஓம் நவ சிவாய
சிவனை வழிபடுவதற்கு உரிய எளிமையான, அனைவரும் அறிந்த மந்திரம் இது. சிவனை உன்னை வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். இதை தினமும் 108 முறை உச்சரிக்க மனம் தெளிவடைந்து, சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
2. ருத்ர மந்திரம் :
ஓம் நமோ பகவதே ருத்ராய
இந்த மந்திரம் சிவனின் அருளை பெற்றுத் தருவதுடன், நம்முடைய அனைத்து விதமாகன விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கக் கூடியதாகும்.
3. சிவ காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தந்னோ ருத்ர பிரசோதயாத்
இந்து மத நம்பிக்கையின் படி காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த சிவ காயத்ரி மந்திரமும் அதீத சக்தி படைத்தாகும். இது மன அமைதியையும், சிவனின் அருளையும் பெறக் கூடியதாகும்.
4. சிவ தியான மந்திரம் :
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்வரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
ஒருவர் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் அவரை விடுவிக்க வேண்டி இறைவனிடம் கேட்பதே இந்த மந்திரத்தின் பொருள். இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மை கிடைக்கும்.
5. மகா மிருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் எம பயம் நீங்கும். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் பெருகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் எந்த நோயும் அண்டாது.

நாராயணாய வித்மஹே வாஸு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்பது இந்த மந்திரம். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில், முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் மனசுத்தத்துடன் இந்த மந்திரத்தை சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.
கிருஷ்ண காயத்ரி மந்திரம் மந்திரம்:
ஆம் தேவகிநந்தனாய வித்மஹே வாசுதேவயா தீமஹி தன்னோ கிருஷ்ணா கிருஷ்ண ப்ரச்சோதயாதே
பொருள்: தேவகி-வாசுதேவர் மைந்தனான கிருஷ்ணரை வணங்குகிறேன்
பலன்: ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த மந்திரம் ஒருவரின் வாழ்க்கை மற்றும் மனதில் இருந்து அனைத்து துன்பங்களையும் துயரங்களையும் நீக்கும்.
கிருஷ்ண மூல மந்திரம் மந்திரம்:
ஓம் கிருஷ்ணாய நம பொருள்:
பரமாத்மாவே, எனது வணக்கங்களை ஏற்றுக்கொள், ஓ ஸ்ரீ கிருஷ்ணா
பலன்:
இந்த சிறிய மந்திரம் பெரும்பாலும் பக்தர்களால் அவர்களின் அன்றாட வாழ்வில் சொல்லப்படுகிறது. இது ஸ்ரீகிருஷ்ணரின் அருளைப் பெற்றுத்தரும்.