பிரதமர் மோடி தற்போது தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கபத்தோட மட்டுமல்லாமல் முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்புரை வழங்கினார் அதில் மோடி அவர்கள் பேசியதாவது:-

“குடும்ப கட்சிகள் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல நம் நாட்டு இளைஞர்களுக்கு ஆபத்தானவை. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த கட்சிகல் ஊழலின் முகமாக இருக்கின்றனர். சுய வளர்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோள், ஏழைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களின் எண்ணம் எல்லாம் எப்படி ஒரே குடும்பம் அதிகாரத்தை பிடிப்பது எப்படி கொள்ளையடிப்பது என்பது தான். தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என அவர் தனது பரபரப்பான உரையை வழங்கியுள்ளார்.
