இந்தியா என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி இந்திய முஜாஹிதீன், ஈஸ்ட் இந்தியா கம்பெனி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் பெயரிலும் இந்தியா இருக்கிறது என காட்டுமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இவ்வாறு கூறிய மோடி மக்களை தவறாக வழிநடத்தும் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
எந்த திசையில் போவது என்று தெரியாமல் மக்களை குழப்புவதற்காக இந்த பெயரை வைத்துள்ளனர் என்று கூறிய அவர் ஆட்சிக்கு வருவது அவர்களது நோக்கம் அல்ல என கூறினார். இன்னும் பல ஆண்டுகள் எதிர்க்கட்சிகளாக இருக்க அவர்கள் தயாராகிவிட்டனர் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
