இப்ப பிரதமர் மோடி குழந்தைகளுடன் பாட்டு பாடி மகிழும் வீடியோவை தற்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பாஜக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் தான் அனுராக் தாகூர் இவர் 2008 ஆம் ஆண்டு முதல் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பள்ளி குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டு பாட்டு பாடி விளையாடும் வீடியோ காட்சிகள் தான் அது. மேலும் அங்குள்ள இசை கருவிகளை இசைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது நரேந்திர மோடி அவர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தொகுதிக்கு தற்போது தான் அவர் வந்திருக்கிறார். இதில் வாரணாசியில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்று பிரதமர் மோடி அங்கிருக்கும் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து நாட்டுப்புற பாடல்களையும் பாடி அது குறித்து விளக்கியுள்ளார். மேலும் நாட்டுப்புற பாடல்களை பாடிய மற்றும் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து காட்டிய பள்ளி குழந்தைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி பின்னர் அவர்களுக்கும் பரிசுகளையும் வழங்கினார்.

பிரதமர் மோடி எப்போதுமே குழந்தைகளுடன் உரையாற்றுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் பொது தேர்வின் போது கூட மாணவர்கள் மனதில் மனதைரியத்தை புகுத்த வேண்டும் என பல நல்ல உரைகளை வழங்கியிருந்தார். அதே போல தற்போது வாரணாசியில் அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களிடையே கலந்து பேசி சந்தோசத்தை வெளிப்படுத்தியது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
देश के भविष्य को निहारते, दुलारते, संवारते आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी… pic.twitter.com/hdXF8XcpSk
— Anurag Thakur (@ianuragthakur) July 7, 2022