KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசி உரையாடல் : இந்தியா மீதான வரி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் புடின் சந்திப்பு பற்றி மோடியிடம் பேசிய புடின்

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசி உரையாடல் : இந்தியா மீதான வரி..! ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் அலாஸ்காவில் நடத்திய சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தார். அந்த உரையாடலில், உக்ரைன் போரை நிறுத்தும் நோக்கில் நடந்த பேச்சுவார்த்தை உடனடி முடிவிற்கு வராதபோதிலும், நல்ல முன்னேற்றமாக இருந்ததாக புடின் தெரிவித்தார்.

இதற்கு பிரதமர் மோடி நன்றியையும் தெரிவித்தார். மேலும், உக்ரைன் பிரச்சினைக்கு இராஜதந்திர பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழியே சரியான தீர்வாகும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டையும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளைப் பற்றியும் விவாதித்தனர். தொடர்ந்து தொடர்பில் இருந்து செயல்பட ஒப்புக்கொண்டனர். பின்னர் வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் மோடி கூறியதாவது “எனது நண்பர் புடின், டிரம்ப் உடன் நடந்த சந்திப்பு விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்தியா எப்போதும் அமைதியான தீர்வை மட்டுமே ஆதரிக்கும். வரும் நாட்களில் இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பைத் தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்தியா மீதான வரி உயர்வு பேச்சுவார்த்தை நடந்ததா ?

இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை இது குறித்து நமது செய்தியாளர் கூறியதாவது மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் பேசியிருப்பார் ஆனால் பொதுவெளியில் சொல்லவில்லை என்றால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அல்லது டிரம்ப் இறுதி முடிவு ஒத்திவைப்பு இருக்கலாம்.

என்று கூறினார் இது இந்த வரி அதிகரிப்பால் பெரும்பாலும் தமிழ்நாடு வரை ஆடை தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது இதனால் ஏற்றுமதி இறக்குமதி பெரும் பாதிப்பில் உள்ளது.

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசி உரையாடல் : இந்தியா மீதான வரி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% சுங்கவரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால், ஜவுளி, தோல், ரத்தினம் போன்ற ஏற்றுமதி துறைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்ட இந்த வரி, ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு பொருளாதார அழுத்தம் அதிகரித்தது.

மோடி அழைப்பு புடின் இந்தியா வருகை ஏன் ?

இந்த சூழ்நிலையில், அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் போர் தொடர்பான விவாதத்தில் உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இருப்பினும், “பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” என்று டிரம்ப் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை அமெரிக்கா தரப்பில் வந்திருந்தது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகின்றன. இந்தியா மட்டும் சுமார் 40% அளவுக்கு இறக்குமதி செய்கிறது.

இந்த நிலையில் புடினுடன் நடந்த சந்திப்பு பின் டிரம்ப், “கூடுதல் வரி விதிப்பது குறித்து உடனடியாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னர் பரிசீலிக்கப்படும். ஆனால் தற்போது இந்தியா மீது கூடுதல் சுங்கவரி விதிக்க வாய்ப்பே இல்லை” என்று அறிவித்தார். இதனால், சமீபத்திய பதற்றத்தின் நடுவில் இந்தியாவுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்