டெல்லியில் முதல்-மந்திரிகள் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியபோது நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மாநாடு நடந்தது.
இந்த மாநாடு தற்போது ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடந்திருக்கிறது. அதில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் “நீதித் துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்”.

நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பணியாற்றிவரும். மேலும் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் இந்த நாட்டின் சாமானிய குடிமக்களுக்கும் நீதித்துறை என்றால் ஒரு நம்பிக்கை வரவேண்டும். 2015 ஆம் ஆண்டில் பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1800 சட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம் இவற்றில் 1450 சட்டங்கள் மத்திய அரசு ரத்து செய்தது, ஆனால் அதில் 75 சட்டங்கள் மாநிலங்கள் அரசே ரத்து செய்தது” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்
