மோடி இன்று அவரின் அம்மாவை பார்க்க சென்ற போது கூடவே கேமராமேன் மற்றும் வீடியோகிராபரை கொண்டு சென்றது சமூக வலைத்தளத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரைப் பார்த்து ஆசி பெற்றிருக்கிறார் அவரது வயது இன்றோடு 100 ஆகிறது. மேலும் அங்கு எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவர் கூறியதாவது :- “அம்மா…இது வெறும் வார்த்தையல்ல, ஆனால் பலவிதமான உணர்ச்சிகளைப் படம் பிடிக்கிறது. இன்று ஜூன் 18. என் அன்னை ஹீராபா தனது 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். இந்த சிறப்பு நாளில், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சில எண்ணங்களை எழுதியுள்ளேன் என அவரது தாயின் புகைப்படத்தை பதிவேற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் தனது அம்மாவைப் பார்க்க ஒரு மகனாக நரேந்திர மோடி செல்லும்போது அங்கு ஏன் போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர் போன்றவர்களை அழைத்து செல்ல வேண்டும் என சமூக வளைதளத்தில் கேள்வி எழுப்பினர் ? அதாவது மோடி தனது அம்மாவை பார்க்க ஒரு காரில் உள்ளே செல்கிறார்.



அந்த காரில் முதலில் போட்டோகிராஃபர் மற்றும் வீடியோகிராஃபர் தான் கீழே இறங்குகிறார்கள். அவர்களுக்கு அடுத்து தான் மோடி இறங்குகிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் அம்மாவைப் பார்க்கச் செல்லும்போது கூட அரசியல் செய்கிறார் நரேந்திர மோடி என வசை பாடி வருகின்றனர். மேலும் சிலர் அம்மாவின் அன்பை பெறுவதற்குசெல்லும் இடத்தில் ஏன் வீண் விளம்பரத்திற்காக கேமராவை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலாய்த்து வருகின்றனர்.
Modi waited for cameraman and videographer to get in first before coming out of car to meet his own mother! pic.twitter.com/YCLVn9Bxzh
— Ashok Swain (@ashoswai) June 18, 2022