ஆடி கிருத்திகை திருநாளில் முருகப்பெருமானை காண அனைத்து பக்தர்களும் திருத்தணிக்கும் அல்லது பக்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கும் செல்வது வழக்கம். இந்த நன்னாளில் முருகனை வணங்கினால் கவலைகள், பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம் என்று பலரது நம்பிக்கை.

இந்த நாள் இன்று ஜூலை 23ஆம் தேதி அன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த ஆடி கிருத்திகை திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் மிகவும் விமர்சையாக நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆடி கிருத்திகை என்பது ஒரு புனித நாளாகும். இந்த நன்னாளன்று பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் ஆடி கிருத்திகை விழாவை கொண்டாடுபவர்களுக்கு தமிழில் வாழ்த்து செய்தியை கூறியுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் :- “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும். என தூய தமிழில் வாழ்த்துக்கள் செய்தியினை தெரிவித்துள்ளார்.

இது தற்போது பாஜக தொண்டர்களிடையே அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த டீவீட்டை ரீட்வீட் செய்திருக்கிறார்.