ஹிந்தி எதிர்ப்பு விஷயத்தில் இயக்குனர் ரஞ்சித்துக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கிறார இயக்குனர் மோகன் ஜி ?

தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாயாகியுள்ள சம்பவம் தான் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வாதம். இந்த வாதத்திற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் அமித் ஷா தான் அதன்பிறகு கிச்சா சுதீப், அஜய் தேவ்கான், உத்தரபிரதேச அமைச்சர் ரஞ்சித் என இத்தனை பேர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பா ரஞ்சித் அவர்கள் தென்னிந்தியாவை விட வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தென்னிந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் ஒரு பாகுபாடு சினிமாவில் இருந்து வருகிறது. அதை உடைக்க வேண்டும் இந்தி மொழி பல மாநிலங்களில் பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதால் அது மேன்மையான ஒரு மொழி என்று கருதுகின்றனர்.

ஆனால் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்தியை ஒருபோதும் நாம் தேசிய மொழியாக ஏற்க போவதில்லை, இந்தியாவில் திராவிடர்களுக்கு முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன் திராவிடர்கள் அனைவரும் ஒன்றாகசேருவது அவசியமாகும் என கூறியுள்ளார்.

சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதல் காரணாமாக 12 ஆம் வகுப்பு மாணவன் மரணம் | நெல்லையை உலுக்கிய சம்பவம்

இதற்கு திரௌபதி மட்டும் ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜி ஒரு டீவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் :- “இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்..இப்படி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை… அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும்.. ஆதரவு தரலாம்..” என கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

கணவனை கழட்டி விட்டு தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நயன்தாரா

வேலன்சியா சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு போட்டோ சூட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது என பேசியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது என பேசியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு

“ஆ.ராசா வாகிய நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அனால் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் ?” – மீண்டும் ஆரம்பித்த ஆ ராசா

இந்துக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா அவர்கள் மன்னிப்பு கேட்கிறேன் என்பது போல கூறி