18 மாதம் பச்சிலம் குழந்தை உட்பட 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய் | காரணம் இது தானாம்

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகளை கிணற்றில் வீசி எரிந்து கொன்ற கொடூர தாய்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காரவல்லி கிராமத்தில் உள்ள 30 வயது பெண், இவர்களுக்கு 18 மாதமே ஆன குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் இந்த தம்பதிகுள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். அதேபோல் ஒரு நாள் இவர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது. அந்த ஆத்திரத்தில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்தில் உள்ள கிணறில் தனது ஆறு குழந்தைகளையும் தூக்கி எறிந்துள்ளார். அந்த குழந்தைகள் கிணற்றில் விழுந்தவுடன் காப்பாற்றும் படி அக்கம்பக்கத்தினருக்கு கூச்சலிட்டு அழைத்துள்ளனர். ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. அதனால் அந்தக் கிணற்றிலேயே அலறியபடி மிகவும் துடிதுடித்து அந்த ஆறு குழந்தைகளும் இறந்து போனது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் உடனே காவல்துறை தெரிவித்தனர்.

தகவலை கேட்டு உடனே விரைந்து வந்த போலீஸார் உறவினர்களின் உதவியுடன் மிதந்து கொண்டிருந்த நிலையில் 6 குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். அதில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 10 வயதுக்குட்பட்ட குழந்தை என 6 குழந்தைகளை மீட்டு உள்ளனர். அதில் ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்தத் பெண்ணை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்த அந்த முப்பது வயது பெண்ணை விசாரிக்கும் போது அவர் கூறியதாவது :- “எனக்கும் என் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனால் அந்த கோபத்தில் என்னுடைய 6 பிள்ளைகளையும் பக்கத்தில் இருக்கும் கிணற்றில் தூக்கி எறிந்தேன்” என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

Spread the love

Related Posts

சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவகத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

பனையூரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மோடியின் வார்த்தைகளுக்கிணங்க இன்று

உபி-யில் கிராமவாசிகளை மயக்கி கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சி | போலீசார் அதிரடி நடவடிக்கை

உத்திரபிரதேசத்தில் கிராமவாசிகளை மயக்கி கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயன்ற ஆறு பெண்களை கைது செய்துள்ளனர்.

கமல் ஹாசனின் விக்ரம் படம் வெளியிட தடை | சென்னை உயர்நிதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் கமல் ஹசன் நடித்த விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்

Latest News

Big Stories